India
“இந்த வெற்றியெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.. இது மோடிக்கும் தெரியும்” : பிரசாந்த் கிஷோர் சொல்வது என்ன?
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்து முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பஞ்சாப்பில் புதிதாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அதேபோல், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இதில் உத்தர பிரதேசத்தில் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியை பிடித்திருப்பது 2024லில் தேர்தலில் பயன்பெறும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் கூறி வருகிறது.
அதிக சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ள உத்தர பிரதேச சட்டமன்றத் தொகுதிகளில், 2024ல் பொதுத்தேர்தலில் 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கை கொடுக்கும் என்றும் பா.ஜ.க கும்பல்கள் கூறுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியும், “5 மாநில தேர்தல் முடிவுகள் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க பெற்றுள்ள வெற்றி 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உண்மையான யுத்தம் 2024லில் இருக்கிறது. இது பிரதமர் மோடிக்கும் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவுக்கான யுத்தம் 2024ல் நடத்தப்படும் முடிவுகளே தீர்மானிக்கப்படும். எனவே பிற மாநிலங்களின் தேர்தல்கள் முடிவு செய்யாது.
இது அவருக்குத் (பிரதமர் மோடி) தெரியும். அதனால்தான் மாநில தேர்தல் முடிவுகள் மூலம் எதிர்க்கட்சிகளிடம் உளவியல் பாதிப்பை ஏற்படுத்திடும் புத்திசாலித்தனமான முயற்சியை மேற்கொள்கிறார். இந்த தவறான சித்தரிப்புக்கு பலியாகவோ அல்லது பாதிப்படையவோ வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!
-
போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? : உதயநிதி கேள்வி!
-
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!
-
“ஆம்னி பஸ்ஸில் 8 மடங்கு கொள்ளை ; மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” : கே.என்.நேரு அறிக்கை!
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!