India
மங்கி குல்லா அணிந்து செயின், பாத்திரம், துணிகள் திருட்டு: அதிகாலையில் கைவரிசையை காட்டிய திருடனுக்கு வலை!
புதுச்சேரி லாஸ்பேட்டை சரவணன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குப்புசாமி - சின்னப்பொண்ணு. வயதான தம்பதியினர். இவர்கள் இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்குவது வழக்கம்.
இந்நிலையில் இரவு சின்னபொன்னு ஜன்னல் அருகே தனது தங்க செயினை கழற்றி தூங்கிய நிலையில், காலை எழுந்து பார்த்தபோது செயின் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் விடியற்காலை 3 மணியளவில் மங்கி குல்லா அணிந்து கொண்டு, சின்னபொண்ணு வீட்டிற்குள் சென்று வருவதும், அதே தெருவில் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்துவிட்டு வெளியே வருவதும் பதிவாகி இருந்து.
இதனை தொடர்ந்து போலிஸார் விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் பாத்திரங்கள் மற்றும் துணிகள் போன்றவற்றை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் சிசிடிவி கேமிராவில் பதிவான மர்ம நபர் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல திருடன்போல் உள்ளதால், போலிஸார் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!