India
2 வயது குழந்தையை அவசர அவசரமாக அடக்கம் செய்த குடும்பம்.. விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்!
உத்தர பிரதேச மாநிலம் ஃபெரோஸாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாநவாஸ். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று தம்பதிகளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, குறுக்கே வந்த தனது இரண்டு வயது பெண் குழந்தையை ஷாநவாஸ் எட்டி உதைத்துள்ளார்.
இதில், குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று குழந்தையை பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாகக் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதையடுத்து போலிஸாருக்கு குழந்தையின் தாத்தா புகார் அளித்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?