India
கணவனை இழந்த பெண்களே குறி.. 54 வயதில் 14 பெண்களை திருமணம் செய்த முதியவர் - போலிஸில் சிக்கியது எப்படி?
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காமேஷ் சந்திர ஸ்வைன் (54) என்பவர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில், போலிஸார் நடத்திய விசாரணையில் 17 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
இவருக்கு 1982ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. பின்னர் 2002ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணங்கள் மூலம் இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளனர்.
பின்னர் காமேஷ் ஒன்றிய சுகாதாரத்தில் பணியாற்றும் மருத்துவர் என கூறி 2002ம் ஆண்டிலிருந்து 2020 வரை பல்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அந்த பெண்கள் அனைவரும் பஞ்சாப், டெல்லி, அசாம், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில்தான் 14வதாக பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர்தான் இவருக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடைபெற்றுள்ளதைக் கண்டுபிடித்து போலிஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை விசாரித்தபோதுதான் அவருக்கு 14 திருமணங்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மேட்ரிமோனி இணையதளத்தில் கணவனை இழந்த பெண்களையே குறிவைத்து அவர்களை திருமணம் செய்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் காமேஷ் சந்திர ஸ்வைனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 7 மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!