India

காதலர்கள் தினத்தில் தம்பதிகளான மாற்றுப்பாலின ஜோடி: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் மனு கார்த்திகா. திருநம்பியான இவருக்கும் சியாமா பிரபா என்ற திருநங்கைக்குக் காதலர்கள் தினமான நேற்று திருணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்துள்ளனர். மேலும் இவர்களின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மகிழ்ச்சியாக நடைபெற்றுள்ளது.

திருநங்கை மனு கார்த்திகா திருவனந்தபுரத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். அதேபோல் திருநங்கை சியாமா பிரபா கேரள அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருந்து வருகிறார்.

இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டார் சம்மதத்துடனே நடைபெற்றுள்ளது. இது குறித்து தம்பதிகள் கூறுகையில், "காதலை கொண்டாடும் ஒரு நாளில் எங்கள் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

நாங்கள் காதலர்கள் தினத்தில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடவில்லை. ஆனால் எங்கள் பெற்றோர்களே இந்த தேதியை முடிவு செய்தனர். நாங்கள் இருவரும் வீட்டிற்கு மூத்தவர்கள். இதனால் எங்களுக்குப் பொறுப்புகள் அதிகமாக இருந்தது.

இந்த பொறுப்புகளைக் கவனித்த பிறகே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். திருநங்கை, திருநம்மி ஆகிய எங்களின் அடையாளத்தின் படியே திருமணத்தைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக சட்டப்போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். விரைவில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஊக்கினை விழுங்கிய 8 மாத குழந்தைக்கு புது வாழ்வை கொடுத்த திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!