India
மீண்டும் ஓர் நிர்பயா: நேர்காணலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; ராஜஸ்தானில் பகீர் சம்பவம்!
டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு வேலையில் சேர்வதற்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக ரயிலில் சிரு பகுதிக்கு கடந்த வெள்ளியன்று (பிப்.,11) சென்றிருக்கிறார் 25 வயதுடைய இளம்பெண்.
அப்போது நேர்காணலுக்கு செல்வதற்காக ரயில் நிலைய வாயிலில் காத்திருந்த போது அப்பெண்ணிடம் வந்த நால்வர், தாங்கள் வழி காட்டுவதாகச் சொல்லி அருகாமையில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அங்கு அப்பெண்ணை நால்வரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு அப்பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்து முதல் மாடியில் இருந்து ஹோட்டலுக்கு வெளியே வீசியிருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்திருக்கிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
அதனையடுத்து, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசியதாக விக்ரம் சிங், தேவேந்திர சிங், பவானி சிங், சுனில் ராஜ்புத் என நால்வரை கைது செய்திருப்பதாக டி.எஸ்.பி. மம்தா சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!