India
குளத்தில் நாயை குளிப்பாட்டிய மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவுரி மனோகரி. இந்த தம்பதிக்கு கௌசிக் என்ற மகன் இருந்தான். இவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது நாயை திருவேட்டக்குடியில் உள்ள குளத்தில் குளிப்பாட்டுவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் குளத்தில், குளித்துக் கொண்டிருந்தபோது, நாய் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றது.
இதனால் நாயை பிடிப்பதற்காக கௌசிக் பின்னால் சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் குளத்தில் இறங்கி தேடிப்பார்த்தனர். தேடலுக்குப் பிறகு கௌசிக் உடலை சடலமாக மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாயை குளிக்க வைக்கும்போது குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!