India
TV பார்க்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ். வாலிபரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு உறவுக்கார சிறுமி ஒருவர் ஆதர்ஷ் வீட்டிற்கு டிவி பார்க்க வந்துள்ளார்.
அப்போது வீட்டில் ஆதர்ஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அவர் சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீட்டில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
பின்னர் நடந்த சம்பவத்தைச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து ஆதர்ஷை கைது செய்தனர். இந்த வழக்கு ஆற்றங்கல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்தது வந்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து ஆதர்சுக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் வழங்க தீர்ப்பளித்துள்ளார்
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!