India
“கோமியம் குடிச்சிட்டு ரெடியா இருங்க..” : அட்டாக் செய்யும் பா.ஜ.கவினருக்கு சவால் விட்ட பெண் எம்.பி!
“நான் இன்று மாலை மக்களவையில் பேசுகிறேன்; கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்.” என பா.ஜ.க.வினருக்கு ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்து வருகிறது. மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது, “50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. நீட் தேர்வை விலக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டை உங்களால் வாழ்நாளில் ஒருநாளும் ஆளமுடியாது” எனப் பேசியது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, பா.ஜ.க.வினருக்கு ட்விட்டரில் சவால் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின்போது பேசுகிறேன். பா.ஜ.க.வினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமேனில் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
திரிணாமுல் காங். எம்.பியின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!