இந்தியா

'மோடி 007' : மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியை கிண்டல் செய்து மீம் வெளியிட்ட திரிணாமுல் காங். எம்.பி!

பிரதமர் மோடியை 'ஜேம்ஸ் பாண்ட் 007'-ஆக மாற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

'மோடி 007' : மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியை கிண்டல் செய்து மீம் வெளியிட்ட திரிணாமுல் காங். எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரதமர் மோடியை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜெண்டாக மாற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

நரேந்திர மோடி இந்திய பிரதமராகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் முடிந்த நிலையில், பாஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடியை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜெண்டாக மாற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. திரிணாமுல் காங் எம்.பி டெரிக் ஓ’பிரையன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மீமில் பிரபல ஜேம்ஸ் பாண்ட் போஸ்டரில் ஜேம்ஸ்பாண்டுக்கு பதிலாக பிரதமர் மோடி இருப்பது போலவும் '007' என்கிற டைட்டிலும் இடம்பெற்றுள்ளது.

'மோடி 007' : மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியை கிண்டல் செய்து மீம் வெளியிட்ட திரிணாமுல் காங். எம்.பி!

பிரிட்டனில் '00' என்கிற அடையாளம் பெறும் உளவாளிகளுக்கு வழங்கப்படும். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிரிட்டனில் '00' உரிமை பெற்ற ஏழாவது அதிகாரியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜேம்ஸ்பாண்ட் பட டைட்டில்களில் ‘007’ என்ற எண் உள்ளது.

அதேபோல, மோடியை வைத்து சித்தரிக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரில், கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி பூஜ்ஜியம், பொருளாதார வளர்ச்சி பூஜ்யம், 7 ஆண்டுகால மோசமான நிதி நிர்வாகம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாக '007'-வுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியை விமர்சிக்கும் இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories