India
மகளுக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை நீதிமன்றத்திலேயே சுட்டுக்கொலை செய்த தந்தை!
பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன். இவரது மகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பகவத் நிஷாத் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு கடத்தில் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து காவல்நிலையத்தில் தில்ஷாத் ஹுசைன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து 2021ம் ஆண்டு ஹைதராபாத்தில் பகவத் நிஷாத்தை கைது செய்தனர்.
இதையடுத்து பகவத் நிஷாத் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு கோரப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக பகவத் நிஷாத் நீதிமன்றதிற்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த தில்ஷாத் ஹுசைனி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பகவத் நிஷாத் தலையில் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப்பார்த்து அங்கிருந்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அங்கு பாதுகாப்பிலிருந்த போலிஸார் தில்ஷாத் ஹுசைனியை கைது செய்தனர். மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, அவரது தந்தை சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!