India
பா.ஜ.கவிலிருந்து வெளியேறும் முக்கிய புள்ளிகள் : மே.வ நிர்வாகிகளால் மண்டை காயும் மோடி-அமித்ஷா!
மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறியுள்ளதாகவும், அடுத்தகட்ட ஆலோசனைக்காக ரகசியக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலை நிலவுகிறது.
அந்தவகையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பா.ஜ.கவின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து பா.ஜ.க தலைவர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 30 பேர் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ரகசியமாகக் கூடி ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.கவிற்கு 77 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அம்மாநில பா.ஜ.க நிர்வாகிகள் அக்கட்சியின் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தேர்தலுக்கு பின் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மீது பா.ஜ.கவில் அதிருப்தி நிலவி வந்தது. இதனால், சமீபத்தில், ஒன்றிய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் அக்கட்சியின் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநில பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறினர். பா.ஜ.க வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொல்கத்தாவில் ரகசியமாகக் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பா.ஜ.க அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்க பா.ஜ.கவிலும் பலர் அதிருப்தியில் இருந்து வருவது அக்கட்சித் தலைமைக்கு கடும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!