India
'பா.ஜ.க சாமானிய மக்களுக்கான கட்சி அல்ல' : பதவியை ராஜினாமா செய்த BJP தலைவர்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதையடுத்து ஐந்து மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க மூத்த தலைவர் மைக்கேல் லோபோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, மகாராஷ்டிராவாடி கோமந்தக் உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால், பா.ஜ.க மகாராஷ்டிரா மோகந்தக் கட்சி மற்றும் சிறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.
அதேபோல் கடந்த முறை 17 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சியைப் பிடிக்க முடியாததால், இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகக் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் மைக்கேல் லோபோ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பா.ஜ.க வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மைக்கேல் லோபோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் அமைச்சர் பதவியிலிருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகிவிட்டேன். பா.ஜ.கவிலிருந்தும் வெளியேறுவேன்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேசி வருகிறேன். நான் வாக்காளர்களைச் சந்தித்துப் பேசியபோதெல்லாம், பா.ஜ.க சாமானிய மக்களுக்கான கட்சி இல்லை என்பது உறுதியானது" என தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் பா.ஜ.கவில் இருந்து விலகினால் அக்கட்சிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !