இந்தியா

மோடியின் பாதுகாப்பு விவகாரம்: முன்னுக்குப்பின் முரணாக பேசிய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

பிரதமர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான பிரச்னையில் ஒன்றிய அரசு முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மோடியின் பாதுகாப்பு விவகாரம்: முன்னுக்குப்பின் முரணாக பேசிய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம் சென்றிருந்தபோது அங்கு பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா தலைமையிலான நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரதமரின் பயணத்திட்ட விவரங்களை சேகரித்து பத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசின் விசாரணை குழு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் கூறி இன்று (ஜன.,10) விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு அரசியல் காரணங்களுக்காக ஒரு சார்பாக செயல்படுகிறது. ஒன்றிய அரசு துறைகளின் விசாரணையால் எந்த நியாமும் கிடைக்காது என பஞ்சாப் மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து முறையான விசாரணை எதுவும் நடத்தாமலேயே ஒன்றிய அரசு மாநில அதிகாரிகளுக்கு எதிராக ஏன் துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு 7 நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த விசாரணையும் நடத்தாமல் துறை நடவடிக்கை என்ற முடிவுக்கு ஒன்றிய அரசு எப்படி வந்தது?

இதன்

எனவே, ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லை. உச்ச நீதிமன்றம் சுதந்திரமான விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும் என்று மாநில அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

100 மீட்டர் தூரத்தில் எப்படி போராட்டக்காரர்கள் வந்தார்கள். இது மாநில அரசின் உளவுத்துறையின் நுண்ணறிவு குறைபாடு என்று ஒன்றிய அரசின் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு எதற்கு நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கடந்த முறை கேட்டீர்கள்? நோட்டீஸ் அனுப்பியது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் விசாரணை குழுவுக்கு தடை விதித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories