India
“காரில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் சுட்டுக்கொலை” : நள்ளிரவில் நடந்த பயங்கரம் - பின்னணி என்ன?
கர்நாடக மாநிலம் பெங்களூர் பி.டி.எம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜசேகர் ரெட்டி. இவர் நேற்று ஒரு வழக்கிற்காக ஆனேக்கல் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராகி வாதாடி விட்டு, இரவு 8 மணிக்கு தனது காரில் வீட்டிற்குத் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, ஆனேக்கல் சந்தாபுரம் சாலையில் வெங்கடேஸ்வர தியேட்டர் அருகில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நடுரோட்டில் வழக்கறிஞர் காரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காருக்குள் இருந்த வழக்கறிஞர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து ஆனேக்கல் போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனேக்கல் பகுதியில் நாடு ரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!