India

டெல்லியை அடுத்து பெங்களூரிலும் முழு ஊரடங்கு அமல்: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடகா!

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தினந்தோறும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் தொற்ற பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கார்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இரவு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும், 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா தீவிரம்: முழு ஊரடங்கு முதல் மருத்துவர்கள் விடுமுறை ரத்து வரை.. கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய டெல்லி!