India
இறந்த பின்னும் சிறுமியை சிதைத்த காமுகர்கள்; ராஜஸ்தானில் கொடூரம்; உடற்கூராய்வு அறிக்கையால் ஷாக்!
ராஜஸ்தானின் பண்டி பகுதியைச் சேர்ந்த 16 வயதே ஆன மலைவாழ் சிறுமி கடந்த டிசம்பர் 23ம் தேதி தோழிகள் இருவருடன் ஆடு மேய்க்கச் சென்றிருக்கிறார். அப்போது இயற்கை உபாதைக்காக மறைவாக சென்ற போது திடீரென மாயமாகியிருக்கிறார்.
இதனையடுத்து சிறுமியுடன் வந்த தோழிகள் இருவரும் மாயமான சிறுமியின் பெற்றோரிடம் விவரங்களை தெரிவிக்க அவர்கள் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்திருக்கிறார்கள்.
அப்போது ரத்த வெள்ளத்தில் சிறுமி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். இது தொடர்பாக அறிந்த அப்பகுதி போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
உயிரிழந்த அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் சிறுமியின் உடற்கூராய்வு குறித்த அறிக்கை தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள பண்டி மாவட்ட எஸ்.ஐ. ஜெய் யாதவ், “இதுகாறும் இப்படியான கொடூர சம்பவத்தை நான் சந்தித்தது இல்லை. மூன்று பேர் சேர்ந்து அச்சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். துப்பட்டாவால் கையை கட்டி வைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கிறார்கள்.
அந்த கயவர்களின் வன்புணர்வு முயற்சியை எதிர்த்து அச்சிறுமி போராடியிருக்கிறார். ஆனால் சிறுமியின் பிறப்புறுப்பில் 30 முறைக்கும் மேல் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சிறுமியின் உடல் முழுவதையும் கீறி காயம் அடையச் செய்திருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், கயவர்களின் துன்புறுத்தலால் சிறுமி இறந்த பிறகும் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் அந்த கொடூரர்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் வாதாட வரப்போவதில்லை என உறுதியளித்திருக்கிறார்கள்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் இருவர் உட்பட மூவரை போலிஸார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?
-
தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. மிரட்டிய ரோடு ஷோ.. ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!