India
மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நபரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற பெற்றோர்: பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அனிருதன். இவரது மனைவி அஜிதா. இந்த தம்பதிக்கு ஜெனட் என்ற மகள் உள்ளார். இவர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஜெனட், நெருங்கிய உறவினரான ஸ்வரூப என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இரண்டுபேரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து அறிந்த ஜெனட் பெற்றோர் இவர்களுக்கு யார் திருமணம் செய்து வைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் உறவினர் ரினீஸ் என்பவர் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரூ.2.5 லட்சும் கொடுத்து கூலி ஏவி ரினிஸை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதையடுத்து கூலிப்படை ரினிஸை கூலிப்படை கும்பல் கொடூரமாகத் தாக்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்களிடமிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற ஜெனட்டின் பெற்றோரை போலிஸார் கைது செய்தனர். மேலும் பதுங்கியிருந்த கூலிப்படை கும்பலைச் சேர்ந்த சுபாஷ் பென்னி, அருண், அஸ்வந்த், அவினாஷ், பாலு பிரனவ் ஆகியோரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!