India
“2 நாளில் ரூ.11.23 லட்சம் கோடி வெளியேற்றம்” : மோடி ஆட்சியில் பின்னடைவில் இந்திய பங்குச் சந்தைகள்!
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்று தற்போது உலகின் 90 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கூட அதிவேகமாக ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதுவரை இந்த தொற்றால் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தை கடுமையாகச் சரிந்து ரூ.11.23 லட்சம் கோடி இழப் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் சரிவிற்கு ஒமைக்ரான் தொற்று காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக நேற்றிலிருந்து நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் ஒருநாளில் 12 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்படும் சூழல் நிலவி வருவதால் இந்தியப் பக்கு சந்தையில் இதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,158 புள்ளிகள் சரிவடைந்தன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!