India
“மோடி ஆட்சியில் சில்லறை வர்த்தகம் படுமோசம்” : 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு !
நாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் (Wholesale Prices Inflation - WPI), 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2021 நவம்பரில் 14.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமே இதுதொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், அதற்கு முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு மொத்த விலைப் பணவீக்கம் அதிகபட்சமாக 12.54 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது அதைக்காட்டிலும் மொத்த விலைப்பணவீக்கம் ஒரே மாதத்தில் 2.73 சதவிகிதம் அதிகரித்து, நவம்பரில் 14.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மொத்த விலைப்பணவீக்கம் 12 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைக்கண்டுள்ளது. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனம், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்பே மொத்தவிலைப் பணவீக்கம் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளன.
குறிப்பாக, உணவுப் பொருட்கள் பணவீக்கத்தை, கடந்த 2020 நவம்பருடன் ஒப்பிடும்போது, 2021 நவம்பரில் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. மேலும், அடிப்படை உணவுப் பொருட்கள் பணவீக்க அதிகரிப்பானது, கடந்த 13 மாதங்களில் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer price index - CPI) அடிப்படையிலான சில்லரை விலைப் பணவீக்கமும் நவம்பரில் 4.91 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!