தமிழ்நாடு

பண மோசடி விவகாரம் : ஓடி ஒளிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - 6 தனிப்படை தேடும் பணி தீவிரம் !

பண மோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய ஏற்கனவே 3 தனிப்படைகள் தேடி வந்த நிலையில், மேலும் 3 தனிப்படை அமைத்துள்ளதாக விருதுநகர் எஸ்.பி மனோகரன் தெரிவித்துள்ளார்.

பண மோசடி விவகாரம் : ஓடி ஒளிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - 6 தனிப்படை தேடும் பணி தீவிரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய காவல்துறை தீவிரம் காட்டிவருகிறது.

ஒரு தனிப்படை திருச்சி பகுதியிலும், மற்ற இரு படைகள் விருதுநகர் மாவட்டத்தின் உட்பகுதியிலும் தேடிவருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் மற்றும் ரமணன் கார் ஒட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும் நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண மோசடி விவகாரம் : ஓடி ஒளிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - 6 தனிப்படை தேடும் பணி தீவிரம் !

இதுகுறித்து தகவலறிந்த வந்த சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் அ.தி.மு.கவினர் திருத்தங்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் தொடர் விசாரணைக்காக மூன்று பேரையும் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது, தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், தற்பொழுது மேலும் 3 தனிப்படை அமைத்து மொத்தம் 6 தனிப்படை மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

அவர் பெங்களூருவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேவைப்பாட்டால் ஒரு தனிப்படை பெங்களூரு செல்லும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விருதுநகரில் உரிய அனுமதி இன்றி அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 600 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories