India
பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க அமைச்சர்.. பதவி ராஜினாமா.. தேர்தல் நேரத்தில் பா.ஜ.கவுக்கு விழுந்த அடி!
பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க அமைச்சர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கோவா நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மிலிந்த் நாயக் பாலியல் தொல்லை அளித்ததாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, கோவாவைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் தன்னுடைய அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் வலியுறுத்தினார்.
கோவா மாநில பா.ஜ.க அரசு, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், பாலியல் தொல்லை அளித்த அமைச்சர் மிலிந்த் நாயக்கின் பெயரை பகிரங்கமாக அறிவித்து புகார் அளித்தார் கிரிஷ் சோடாங்கர்.
மேலும், பா.ஜ.க அமைச்சரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் போனில் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு, அந்த ஆதாரங்களை போலிஸிடமும் ஒப்படைத்தார்.
பாதிக்கப்பட்ட பீகார் மாநில இளம்பெண் தற்போது பீகாருக்கு சென்றுவிட்டார். அவருக்கு நியாயம் கிடைக்க உதவும்படி பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் ஒன்றையும் கிரிஷ் சோடாங்கர் அனுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் தொடர் புகார்களைத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த பா.ஜ.க அமைச்சர் மிலிந்த் நாயக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கோவாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!