India
"முடிவெடுப்பதில் தாமதம்.. அரசின் கட்டமைப்பு சரியில்லை": நிதின் கட்கரி பேச்சால் பா.ஜ.க அதிருப்தி!
அரசின் கட்டமைப்பு சரியில்லாததால் திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமானம் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
இந்நிகழ்வில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி," அரசின் திட்டங்களில் முடிவுகள் எடுப்பதில் தாமதம் செய்யப்படுகிறது. இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மேலும், முடிவுகளை எடுப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுவதால் திட்டங்களுக்கான செலவும் அதிகரிக்க வழிவகுக்கிறது.
இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் கட்டுமானமும் ஒன்று. இதை நாம் அனைவரும் அறிவோம். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்வதில் கட்டுமானத்துறை இரண்டாவது இடத்தில் உள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க ஒன்றிய அரசு எப்போதும் முயற்சிகளை எடுத்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!