India
"பள்ளிக்கு ஏன் வரல".. திட்டிய ஆசிரியர்கள்: விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி!
புதுச்சேரி, பூமியான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் ஸ்வேதா. இவர் கதிர்காமம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து புதுச்சேரியில் பள்ளிகள் கடந்த நவம்பரில் நேரடி வகுப்புகள் துவங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக ஸ்வேதாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து நேற்று ஸ்வேதாகவை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது பள்ளிக்கு ஏன் வரவில்லை என கூறி மாணவியை ஆசிரியர்கள் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த ஸ்வேதா வீட்டிற்குச் சென்று கழிவறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர், அங்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!