India
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து அரசின் திட்டம் என்ன?: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!
12 வயதிற்கு உட்பட்டகுழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி போடுவது குறித்து அரசு பரிசீலிக்குமா? என்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
மேலும்,18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த அரசின் திட்டம் பற்றியும், இந்த வயது குழந்தைகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடுவது குறித்த திட்டம் பற்றிய விளக்கத்தையும் தெரிவிக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின்பவார் எழுத்து மூலம் அளித்துள்ள பதில் வருமாறு:-
இரண்டு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது குறித்த பாரத் பயோ டெக் அறிக்கையினை நிபுணர் குழுவுடன் 26.08.21 மற்றும் 11.10.21 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அவசரகால நிலைமைக்கு ஏற்ப, அந்த தடுப்பூசியை 2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பயன்படுத்த நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் ஒன்றிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கூடுதல் தகவல் கோரப்பட்டுள்ளது. அந்த அமைப்பு கொடிலா ஹெல்த்கேர் தயாரித்த கோவிட்-19 மருந்தான ‘சைகோவிட்’டையும் பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
Also Read
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர் : திருச்சி IG இல்லம் அருகே நடந்த அதிர்ச்சி!
-
“மாயாஜாலம் வளர்ச்சியைத் தராது” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !