India

இனி டீ கூட குடிக்க முடியாது.. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்திய மோடி அரசு!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கூட தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு, பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டிஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.101 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2234க்கு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் விலை உயர்த்தப்பட்டது. இந்த மாதம் முதல் தேதியிலேயே விலை உயர்ந்துள்ளது உணவக உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து மீண்டும் ரூ.101 க்கு விலை உயர்த்தப்பட்டுள்ள சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் உணவகங்களில் கடுமையாக விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டீ, காபி விலையும் உயர வாய்ப்புள்ளது.

Also Read: "கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே ஒமிக்ரான் அதிகம் தாக்கும்": விஞ்ஞானிகள் கூறுவது என்ன?