India
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா இன்று தாக்கல்.. பரபரப்பான சூழலில் தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இரு அவைகளிலும் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தின.
கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று அறிமுகம் செய்வார்.
மேலும், கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோாதா, திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாகவும், மக்கள் விரோத மசோதாக்கள் தாக்கல் செய்யாமல் தடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதும் தி.மு.க சார்பில் போட்டியிட்டு மாநிலங்களவை எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எம்.அப்துல்லா, கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகிய உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !