India
வரதட்சணை பணத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.. மணமகளின் முடிவிற்குக் குவியும் பாராட்டு: காரணம் என்ன?
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி கன்வார். இவருக்கு கடந்த 21ம் தேதி பிரவீன் கிஷோர் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்காக அவரது தந்தை ரூ.75 லட்சம் வரை வரதட்சணை கொடுக்க இருந்தார். இதையறிந்த மணமகள் அஞ்சலி கன்வார், தனது தந்தையிடம் வரதட்சணை பணத்தில் பெண்கள் விடுதி கட்டும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர், மகளின் இந்த சேவை மனப்பான்மையைப் பார்த்த அவரது தந்தை கிஷோர் சிங் கானோட், தொகை ஏதும் குறிப்பிடாமல் Blank Cheque ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் 'உனக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதை எழுதிக் கொள்' என்றும் மகளிடம் கூறியுள்ளார்.
மணமகள் அஞ்சலி கன்வாரின் இந்த முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே தனது பகுதியில் பெண்கள் விடுதி கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!