India
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்ட ஆளுநர் CONVOY ஓட்டுநர்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ். இவர் ஆளுநர் வாகனத்துடன் செல்லும் பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனால் கேரள ராஜ்பவன் வளாகத்திற்கு அருகே உள்ள ஓட்டுநர் குடியிருப்பில் தங்கி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த சக குடியிருப்பு வாசிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரது அறையில் போலிஸார் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முன்பு அவர், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதேபோல், தனிப்பட்ட பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்துள்ளார் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் கான்வாய் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!