India
வாடகைக்கு வீடு தேடிய இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த புரோக்கர்... மும்பையில் நடந்தது என்ன?
குஜராத்தைச் நேர்ந்த பெண் ஒருவர் மும்பையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கொரோனா காரணமாக இவர் கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து அவரை அலுவலகம் வரும்படி அந்நிறுவனத்தினர் அழைத்துள்ளனர். இதனால அவருக்கு கொரோனா காரணமாக மும்பையில் தங்கியிருந்த வீட்டை காலி செய்ததால் மீண்டும் வீடு தேடவேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் அந்தப் பெண், புதிதாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி வீடு தேடிவந்துள்ளார். இதைப்பார்த்த ஒருவர் அவருக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது புரோக்கர் என்று கூறி, அவருக்காக வீடு தேடுவதாகக் கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் வாட்ஸ் -அப்பிற்கு வீடியோ ஒன்று அனுப்பி வீடு பிடித்திருக்கிறதா எனக் கேட்டுள்ளார்.
இதற்கு அந்தப் பெண் வீட்டின் வாடகை எவ்வளவு என விசாரித்துள்ளார். அப்போது அந்த நபர் திடீரென பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதையடுத்து அழைப்பைத் துண்டித்துள்ளார். ஆனால் அந்த நபர், 'நான் சொல்வதுபோல் நடந்து கொண்டால் உணக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்' என மெசேஜ் செய்துள்ளார்.
இதற்கு அந்தப் பெண் பதில் எதுவும் கூராததால் ஆத்திரமடைந்த அந்த நபர், விபச்சாரியாக உன்னைச் சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண், வீடு புரோக்கர் என கூறி ஆபாசமாகப் பேசிய மெசேஜ் மற்றும் உரையாடல்களைக் கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!