இந்தியா

குழந்தைகள் ஆபாசப்பட விவகாரம் : CBI நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 5,000 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆன்லைனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த வழக்கில் 7 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குழந்தைகள் ஆபாசப்பட விவகாரம் : CBI நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய 5,000 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளின் ஆபாசப் படம் பரப்புதல் தொடர்பாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாக நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேரை சி.பி.ஐ போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், "கைது செய்யப்பட்ட ஏழு பேரும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிட்டு அதைப் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து 83 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் வீடியோக்களை பார்ப்பதற்காகவே சிலர் பணம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் ஆபாசப் படம் குறித்தான விசாரணையில் 50 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதில் 5 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. கடந்த 2017 முதல் 2020ம் ஆண்டு வரை 24 லட்சம் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் ஆபாச வீடியோ குறித்து தினமும் 1.16 லட்சம் பேர் தேடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories