India
கிளம்பிய வேகத்திலேயே தரையிறங்கிய Air India விமானம்... உயிர்தப்பிய 100 பேர்... நடந்தது என்ன?
அசாம் மாநிலம் கும்பகிராம் விமான நிலையத்திலிருந்து இன்று ஏர்பஸ் ஏ319 என்ற Air India விமானம் கொல்கத்தாவை நோக்கி தனது பயணத்தைத் துவக்கியது. விமானம் பறக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருந்ததை விமான ஓட்டுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் பதட்டமடைந்த அவர்கள் உடனடியாக கிளம்பிய வேகத்திலேயே மீண்டும் விமானத்தை கும்பகிராம் விமான நிலையத்திலேயே தரையிறக்கினர். இதனால் விமானத்தில் பயணம் செய்த 100 பேர் உயிர்தப்பினர். இதையடுத்து விமான ஓட்டிகளுக்கு பயணிகள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்தனர்.
இந்த ஏர்பஸ் ஏ319 விமானம் கிட்டத்திட்ட 156 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்டதாகும். விமானத்தில் சக்கரத்தில் கியர் பழுதை கண்டறிந்து உடனே தரையிறங்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், திருவனந்தபுரத்திலிருந்து சவுதி அரேபியாவை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதைக் கண்டறிந்த விமானிகள், உடனே அவசரமாக அருகே இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!