India
Aashram படக்குழு மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் தாக்குதல் : இயக்குநர் மீது மை பூசிய கொடூரம்.. நடந்தது என்ன?
Mx player-ல் பாபி தியோலை நடித்துள்ள ஆஷ்ரம் படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் தற்போதுவரை உள்ள நிலையில், “ஆஷ்ரம் - 3” மூன்றாம் பாகத்தை இயக்குநர் பிரகாஷ் ஜா எடுத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் இந்து மதத்தை அவமதித்துள்ளது என கூறி பஜ்ரங் தளம் அமைச்சர் சேர்ந்தவர்கள் திடீரென படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது, படத்தின் இயக்குநர் பிரகாஷ் ஜா முகத்தில் மை பூசி அவமதித்து மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்த கலைஞர்களைத் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து பஜ்ரங் தளம் அமைப்பினர் சூறையாடியுள்ளனர்.
பின்னர், இந்த தொடரை எடுக்கக் கூடாது என இயக்குநருக்கு மிரட்டல் விடுத்து பஜ்ரங் தளம் அமைப்பினர் அங்கிருந்து சென்றுள்ளனர். பிறகு இது குறித்துப் படக்குழு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.
ஆனால், படக்குழுவைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு குழுவிற்கு போலிஸார் பாதுகாப்பு அளித்துள்ளனர். பஜ்ரங் தளம் அமைப்பின் இந்த செயலுக்கு சினிமா நடிகர்களும், இயக்குநர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பா.ஜ.க ஆட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!