India
"முடிஞ்சா ஆட்சியை கவிழ்த்து பாருங்க" : பா.ஜ.கவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!
மகாராஷ்டிராவில் உறவு முறிந்தபின் சிவசேனாவை பா.ஜ.க குறிவைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, "இந்துத்துவா சித்தாந்தத்துக்கு அச்சுறுத்தல் வெளியே இருப்பவர்களால் வரவில்லை. இந்துத்துவா பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்களாலேயே அச்சுறுத்தல் வருகிறது.
இவர்களிடமிருந்து இந்துத்துவாவை காக்க மராத்திய மக்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும். மும்பையை போலிஸ் மாஃபியாக்கள் ஆள்கிறது எனக் கூறுகிறார்கள். இதுபோன்று உத்தர பிரதேசத்தைக் கூற முடியுமா?
பா.ஜ.கவை விட்டு பிரிந்தபின் சிவேசனாவை பா.ஜ.க குறிவைக்கிறது. இதற்காக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது. மேலும் ஆட்சியைக் கவிழ்க்கவும் முயற்சி செய்து வருகிறார்கள். அடுத்த மாதத்தோடு 2 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறோம். முடிந்தால் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள். உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.கவும், அதன் முன்னோர்களும் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. இப்படி இருக்கும்போது சாவர்க்கரைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது உங்களுக்கு" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!