India
பள்ளி மாணவியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை... 4 பேர் கைது: கொடூரமாக மாறும் கர்நாடகா!
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்திற்குப்பட்டது கெம்புகுட்டா கிராமம். இந்த பகுதியைச் செர்ந்த 17வயது பள்ளி சிறுமி ஒருவர் வெள்ளியன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிறுமிக்கு அறிமுகமான ஒருவர் அங்கு வந்துள்ளார். பின்னர் திடீரென தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை காரில் கடித்திச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை வீட்டில் அடைத்துவைத்துள்ளனர்.
பின்னர், சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மயக்கமடைந்த பிறகு சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து மயக்கம் தெளிந்து இவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமி கூறிய அடையாளங்களைக் கொண்டு நான்கு பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்புதான் யாத்கிரி மாவட்டத்தில் திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த கொடூர சம்பவம் நடந்த நிலையில், தற்போது பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?