India
“பா.ஜ.கவில் இணைந்தது பெரிய தவறு” : மொட்டையடித்து கட்சியிலிருந்து விலகிய திரிபுரா MLA - என்ன காரணம்?
திரிபுரா மாநிலம், சூர்மா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர். இவர் தொடர்ச்சியாக மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையி,ல் ஒரு வாரத்திற்கு முன்பு இவர் மேற்குவங்கம் சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு கோவிலுக்குச் சென்ற ஆஷிஷ் தாய் மொட்டையடித்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.கவில் இணைந்தது பெரிய குற்றம். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாகவே நான் மொட்டை அடித்துக் கொண்டேன். மேலும் பா.ஜ.கவில் இருந்து நான் விலகுகிறேன். அடுத்தடுத்து மற்ற எம்.எல்.ஏக்களும் விலகுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சியுடன் பேசி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே கட்சியில் சேர்ந்தது தவறு என அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க வை சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!