India
பகல் முழுவதும் குடி.. இரவில் பேருந்தில் சென்று திருடும் விநோத கொள்ளையன் : போலிஸில் சிக்கியது எப்படி?
புதுச்சேரி லாஸ்பேட்டை தேவகி நகரைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்துள்ளதாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அங்கு வந்த போலிஸார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
இதில் ஒருவர் மட்டுமே போலிஸாரிடம் சிக்கினார். அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் இவர் ஆம்பூரைச் சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரியவந்தது.
மேலும் இவர் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை, கோரிமேடு ஆகிய பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இவர்மீது வேலூர், ஆம்பூர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தினமும் ஆம்பூரிலிருந்து பேருந்து ஏறி புதுச்சேரிக்கு வந்து மதுக்கடைகளில் குடித்து விட்டு வீதி வீதியாகச் சென்று பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பிறகு இரவு நேரத்தில் அந்த வீட்டில் கொள்ளையடித்து விட்டு மீண்டும் பேருந்து ஏறி ஆம்பூருக்கு செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்து வந்துள்ளார்.
இதையடுத்து இவரிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை போலிஸார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிய இடங்களில் கைரேகைகூட பதியாமல் திருடி வந்த இவர் ஒரு போன்காலில் போலிஸிடம் சிக்கியுள்ளார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!