India
“படத்துல மட்டும் இல்ல.. நிஜத்திலேயும் அப்படித்தான்” : போதைப்பொருள் கடத்திய 'சிங்கம் 2' நடிகர் கைது!
'சிங்கம் 2' படத்தில் போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பார் டேனி சபானி. இவரது கூட்டாளியாக நைஜீரியாவைச் சேர்ந்த காக்விம் மெல்வின் என்பவர் நடித்திருப்பார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் மெல்வின் நடித்துள்ளார். மேலும் பெங்களூருவில் தங்கி பல்வேறு படங்களில் நடித்து வந்துள்ளார்.
ஆனால் நடிப்பின் மூலம் போதிய வருமனாம் கிடைக்காததால், தனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி படத்தில் வருவதுபோலவே போதைப் பொருட்களைக் கடத்தி மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலிஸார் போதைப் பொருள் கும்பல் ஒன்றைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மெல்வின் குறித்த தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் மெல்வின் வீட்டில் அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், ஹாசிஸ் கஞ்சா எண்ணெய் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம். மேலும் ரூ. 5,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றையும் மெல்வினிடம் இருந்து போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!