சினிமா

”என்னால முடியல; லவ் யூ அம்மா, அப்பா” : 5 பக்க கடிதம் எழுதி வைத்து உயிரை விட்ட சீரியல் நடிகை!

கன்னட சீரியல் நடிகை செளஜன்யா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”என்னால முடியல; லவ் யூ அம்மா, அப்பா” : 5 பக்க கடிதம் எழுதி வைத்து உயிரை விட்ட சீரியல் நடிகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சபி மாதப்பா என்கின்ற சௌஜன்யா. இவர் சின்னத்திரை தொடரில் நடித்து வந்த நிலையில் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள கும்பலகோடு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர் விவேக்குடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடன் இருந்த விவேக் அருகிலுள்ள உணவகத்திற்கு சென்று காலை டிபன் பார்சல் வாங்கி வருவதற்குள் இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

”என்னால முடியல; லவ் யூ அம்மா, அப்பா” : 5 பக்க கடிதம் எழுதி வைத்து உயிரை விட்ட சீரியல் நடிகை!

இவர் தற்கொலை செய்துகொண்ட அறையில் 5 பக்க கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் எனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஐ லவ் யூ அப்பா, அம்மா. நான் இந்த மாதிரி நிலைமையில் உங்களை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. என்னால் நல்ல நிலைமைக்கு வர முடியும் என்றும் தெரியும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை என்னை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது.

நான் எழுதியிருந்த இந்த கடிதத்தை மீடியாக்களுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் 5 பக்கம் விரிவான சில தகவல்களை எழுதியுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக கும்பலகோடு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories