India
100க்கும் மேற்பட்ட திருட்டுகள்... திருடர் குல திலகமான பிரபல விளையாட்டு வீரர்... அதிர்ச்சியடைந்த போலிஸ்!
டெல்லியின் மோதி நகர் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் போலிஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலிஸார் விசாரித்தனர்.
அப்போது அந்த நபர் வந்த இருசக்கர வாகனம் கீர்த்தி நகரில் திருடப்பட்டது என்று போலிஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் கராத்தே போட்டியில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர் சுராஜ் என்பதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த சுராஜ், சம்சி மண்டி பகுதியில் செல்போன்கள் மற்றும் தங்க நகைகள் திருடியுள்ளார். இவர் இப்படி வழிப்பறி செய்த நகைகள் மட்டும் 2.5 கிலோவுக்கு மேல் இருக்கும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் 100க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து சுராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள் இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி குண்டுகளும், கத்திகள், 55 திருடப்பட்ட போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Also Read
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!