India
தெரு நாய் இறந்ததற்கு பேனர் அடித்து விருந்து வைத்து அஞ்சலி : ஒடிசாவில் நடந்த விநோதம்; காரணம் என்ன?
ஒடிசா மாநிலம், பத்ரக் பகுதியில் அதிகமான துரித உணவக கடைகள் உள்ளன. இங்குக் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெண் நாய்குட்டி ஒன்று வந்துள்ளது. இந்த நாயை அங்கிருக்கும் ஒரு கடை உரிமையாளர் பிஸ்வால் என்பவர் இதற்கு 'சம்பி' என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
மேலும் இந்த நாய்க்கு என்று தனியாக ஒரு தட்டு பராமரித்து, இதில் பிரியாணி, ரசகோலா, ரொட்டி அல்லது அரிசி, பிஸ்கட் என அங்கிருக்கும் அனைத்து கடை உரிமையார்களும் உணவு கொடுத்து அன்பாக சம்பியை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி சம்பி திடீரென இறந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர்கள் சோகத்தில் இருந்துள்ளனர். பிறகு நாய் இறந்து 11வது நாளில் பத்ரக் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு விருந்து கொடுத்து சம்பிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் கடை வீதியில் சம்பியின் உருவம் பொருத்திய பேனர் ஒன்றை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். கடைக்காரர்களின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற்ற ‘தினத்தந்தி’ நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார்! : முழு விவரம் உள்ளே!
-
“மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் நான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?