India
மக்களே உஷார்.. ATM மையங்களில் நூதன திருட்டு : கைவரிசையை காட்டிய 2 பேர் கைது - போலிஸ் விசாரணை பகீர் தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கரி ஏ.டி.எம் மையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நல்லசோபாரா பகுதியில் இரண்டு நபர்கள் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் உதவுவதாகக் கூறி, அவரின் டெபிட் கார்டை திருடிக் கொண்டு அதற்கு பதிலாக வேறு கார்டை அவரிடம் கொடுத்துள்ளனர்.
இதை அங்கிருந்த போலிஸார் கவனித்துக் கொண்டிருந்தனர். பிறகு அந்த இரண்டு பேரை பிடித்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அக்பரலி ஷேக், சங்கர் ரங்கநாத் சுரத்கர் என்பதும், இவர்கள் இருவர்தான் வங்கி வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து ஏ.டிஎ.ம் கார்டுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!