India
“நாங்கள் காந்தியையே விட்டுவைக்கவில்லை.. நீங்கள் யார்?” : இந்து மகா சபை நிர்வாகி சர்ச்சை பேச்சு!
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூட்டில் என்ற பகுதியில் உள்ள இந்து கோவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதால் அதனை இடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அம்மாநில அரசு அந்த கோவிலை இடித்தது. இதனால் சில இந்துத்வா கும்பல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அம்மாநில முதல்வருக்கு எதிராக இந்து மகா சபை நிர்வாகி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த இந்து மகா சபையின் மாநிலப் பொதுச் செயலாளர் தர்மோந்திரா, நாங்கள் கோவில் இடிப்பை அனுமதிக்கவில்லை.
அதுமட்டுல்லாது, நீதிமன்றத்தின் உத்தரவு இந்துக்கள் மீதான தாக்குதல் என்று கூறிய அவர், நாங்கள் காந்தியையே விட்டு வைக்கவில்லை; நீங்கள் யார் என கொலை மிரட்டல் விடுத்து பேசினார். அவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானதும், தர்மோந்திரா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தர்மோந்திரா உள்ளிட்ட 3 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!