India
பாக்கெட் மணி தரமறுத்த தந்தை... துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு மகன் தற்கொலை : பெங்களூருவில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படை தலைமை அலுவலகம் அருகே உள்ள நடைபாதையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் அங்கு சென்ற போலிஸார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தவரின் சடலம் அருகே துப்பாக்கி, பெல்ட், செல்போன் ஆகியவை இருந்தன. அவற்றைக் போலிஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பின்னர் உயிரிழந்தது ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் ராகுல் பண்டாரி என்பது தெரியவந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த இவர் தந்தையிடம் பாக்கெட் மணியாக 500 ரூபாய் கேட்டுள்ளார். இதை அவரது தந்தை தர மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்து ராகுல் பண்டாரி தந்தையின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து ராகுல் பண்டாரியின் தந்தையிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?