India
“கழுத்து, கை அறுக்கப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மாணவி” : கல்லூரி விடுதியில் நடந்தது என்ன?
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்பந்தனா. இவர் புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா சென்றிருந்த ஸ்பந்தனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் குணமடைந்ததை அடுத்து அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குத் திருப்பினார். இருந்தபோதும் அவர் சோர்வாகவே இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று மாலை விடுதி மாணவர்கள் ஸ்பந்தனாவின் அறைக் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் அதிக நேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காததால் மாணவிகள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது, ஸ்பந்தனா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த போலிஸார் விடுதிக்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஸ்பந்தனா கத்தியால் தனது கழுத்து, கை நரம்புகளை அறுத்துள்ளார். இதனால் அந்த இடத்தில் ரத்தக்கறையாக காணப்பட்டது. உடல் நிலை சரியில்லாததால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Also Read
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம் - கிடப்பில் போடப்பட்ட கீழடி அறிக்கை : முரசொலி!