India
ஜாமீனில் வெளி வந்த இளைஞர்.. வெட்டி படுகொலை செய்த பெண்ணின் தந்தை: காரணம் என்ன?
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் விஜய் மெர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது குறித்து பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் கடந்த மார்ச் மாதம் விஜய் மெர் இருக்கும் இடத்தை அறிந்து அவரிடம் இருந்து மைனர் பெண்ணை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் விஜய் மெர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பர் விஜய் மெரை கொலை செய்யத் திட்டம் போட்டனர்.
இதன்படி சம்பவத்தன்று விஜய் மெர் ராஜ்கோட்டின் சன்கபூர் சாலையில் இருப்பதை அறிந்த பெண்ணின் தந்தை அங்குச் சென்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விஜய் மெர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்
-
“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!