India
“நாடாளுமன்றத்தில் விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்றுவது வருத்தமளிக்கிறது” : மோடி அரசை சாடிய தலைமை நீதிபதி!
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது வேதனை அளிக்கக்கூடியதாக இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தேசியக் கொடியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்றிவைத்தார்.
பின்னர் பேசிய என்.வி.ரமணா, ”நாடாளுமன்றத்தில் முன்பெல்லாம் மசோதாக்கள் குறித்து விரிவான ஆழமான விவாதங்கள் நடைபெறும். இதனால் நீதிமன்றங்களின் தலையீடு குறைவாக இருக்கும். ஆனால், தற்பொழுது மசோதாக்கள் உருவாக்குவதில் தெளிவு இல்லை.
மேலும், விவாதங்கள் போதுமான அளவில் நடைபெறாததால், ஏராளமான வழக்குகள் புதிய மசோதாக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. வழக்கறிஞர்கள் போதுமான அளவிற்கு பொது வாழ்வுக்கு வந்து நாடாளுமன்றத்திற்குச் செல்லாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். எனவே படித்த அறிவார்ந்த வழக்கறிஞர்கள் பொது வாழ்விற்கு அதிக அளவில் வர வேண்டும்.
ஏனென்றால் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல முன்னணி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருமே வழக்கறிஞர்கள் தான். இவர்கள் அனைவரும் தங்களது தொழிலை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை தங்களது குடும்பம் சொத்து என அனைத்தையும் விட்டுத்தான் நாட்டுக்காக உழைத்தார்கள். வழக்கறிஞர்களும் பணம் சேர்ப்பது மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், உங்களுடைய திறமைகள் நாட்டிற்காக அர்ப்பணிக்கப் படுவதை உறுதி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!