இந்தியா

இந்தியாவே பாராட்டும் முதல்வர்: "தமிழ்நாடு அரசை பின்பற்றுங்கள்" - கர்நாடக அரசுக்கு சித்தராமையா வேண்டுகோள்!

தமிழ்நாட்டைப் போன்றே கர்நாடகாவிலும் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவே பாராட்டும் முதல்வர்: "தமிழ்நாடு அரசை பின்பற்றுங்கள்" - கர்நாடக அரசுக்கு சித்தராமையா வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, தி.மு.க தேர்தல் அறிக்கையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நேற்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அப்போது, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் தற்போது பெட்ரோல் விலை ரூ. 100க்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டு அரசின் இந்த முடிவுக்குப் பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுப் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை 100 ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் மாநில அரசுகள் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டியது தானே எனக் கூறிவந்த நிலையில், விலையைக் குறைத்து தனது செயல்பாட்டின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டைப் பின்பற்றி கர்நாடகத்திலும் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சாமானிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகத்திலும் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories