India

“தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உண்டு” : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் சிக்கல்கள் நேருமா என்பது தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் , என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவரது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்ந்த விவகாரங்களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? என கேட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி ரேகா பாலி, “ஒரு குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த உரிமை உள்ளது. தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம்” என தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

Also Read: ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய கணவர் - மனைவி திட்டியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!