India
300 பெண்களிடம் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு: Fackebook-ல் காதல் வலை வீசிய இளைஞர் கைது!
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார் என்கிற ராஜா. படிப்பை பாதியிலேயே நிறுத்திய ராஜா, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, வழக்கில் சிக்கி சிறைக்கும் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி திருட்டு வழக்கில் ராஜாவை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ராஜாவின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது காவல்துறையிரே அதிர்ச்சியடையும் வகையில் ஏராளமான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்கள் நிர்வாணம் மற்றும் அறை நிர்வாணத்துடன் இருந்தது.
இதனையடுத்து ராஜாவிடம் விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜா சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்களிடம் நட்பாக பழகி, காதல் வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் ராஜாவை பெண்கள் முழுவதுமாக நம்பும் வேளையில், பெண்களிடம் நிர்வாண, அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் படி கேட்டுள்ளான் ராஜா.
அவனது ஆசை வார்த்தையில் மயங்கிய பெண்களும் காதல் என நினைத்து, ராஜாவின் அறிவுறுத்தல் படி, தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து சில நாட்களிலேயே புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பிய பெண்களை மிரட்டி நகை, பணம் வாங்கியுள்ளான். அவ்வாறு தரவில்லை என்றால் நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான். இதனால், பயந்துப்போன பெண்கள் அவன் கேட்ட நகை, பணத்தை கொடுத்துள்ளனர்.
மேலும், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளான். அதன்படி கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், ராஜாவின் வலையில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ராஜாவின் செல்போனை பறுமுதல் செய்து, அவன் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!